>

போட்டிகள்
post img

பேச்சு போட்டி


‘கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வர்' தன் மக்களை உண்மையும்,நேர்மையுமாக பேரன்பு கொண்டு நேசிக்கும் ஒருவரால் தான், மக்களின் இன்னல்களுக்கு தீர்வு காணும் திட்டங்களை வகுக்க முடியும். அத்திட்டங்களை செல்படுத்துவதற்கு, அதிகார பலம் வேண்டும், அதிகார பலம் பெறுவதற்கு மக்களின் மனதை வெல்ல வேண்டும். உலக புரட்சியாளர்கள் அனைவரும் தங்கள் மண்ணின் மக்களோடு இரண்டுற கலந்திருந்தது தான், அப்புரட்சியாளர்களின் வெற்றிக்கு காரணம். மக்களின் மனதோடு கலந்துரையாட, அப்புரட்சியாளர்கள் பயன்படுத்திய பேராயுதம், பேச்சு. பேச்சாற்றல் மிக்க இளைய தலைமுறையை உருவாக்குவதற்கான களம்!
post img

கட்டுரை போட்டி


நல்லவை போன்று தோன்றும்படி, கட்டமைத்து தான் தீமைகள் அனைத்தும் மக்களிடம் விதைக்க படுகின்றது, ஆகையால் நிகழ்வுகள் எதுவாகினும், அவற்றை பகுத்தறிந்து எடுத்துரைப்பது காலத்தின் தேவை. எடுத்துரைக்கும் கருத்துகளை முறைப்படுத்தி, நேர்மையான தரவுகள், புள்ளிவிவரங்களுடன் இணைத்து, படிப்பவரது கவனத்தை ஈர்க்கும் வகையில், எளிய நடையில் கட்டி உரைக்கும் வருங்கால தலைமுறைக்கான களம்
post img

ஓவிய போட்டி


தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பேச்சுகளை மட்டுமே கேட்பது; எழுத்துகளை மட்டுமே படிப்பது என்பது, உலக மாந்தர்களின் இயல்புகளில் ஒன்று. இத்தகையான இயல்புகளால் பேச்சு மற்றும் எழுத்து வடிவில் பகிரப்படும் பல கருத்துக்கள் அனைவரையும் சென்று சேருவதில்லை. ஆனால் ஓவியம் என்பது, பண்டைய காலம் தொட்டு மிக வலிமையான கருத்து பரிமாற்று கருவியாக இருந்து வருகிறது. பேச்சு, எழுத்து போல் அல்லாது அனைத்து மக்களையும் சென்று சேரக் கூடியது, ஓவியம் வாயிலான கருத்து பரப்புரை. தமிழ் இளம் தலைமுறையின் ஓவியத் திறனை வளர்க்கும் களம்.
post img

கவிதை போட்டி


'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' அனைத்து கருத்துகளையும் சுருக்கி, குறுக்கி அழகு தமிழில் வடிக்கும் கவிஞர்கள் தான், தமிழறிஞர்கள் என்றதும் நம் நினைவுக்கு வருபவர்கள். நாளைய வரலாற்றில் பொற்பதிப்புகளாக திகழவிருக்கும் கவிஞர்களின் களம்.
post img

சிறுகதை போட்டி


கதை கேட்காமல் வளர்ந்த குழந்தையும் இல்லை, கதைச் சொல்லாத பாட்டியும் இல்லை. வயது பாகுபாடு இன்றி அறநெறிகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உதவுவது சிறுகதைகள். ஒரு வரியில் பேசினால், எழுதினால் அது செய்தி. அதையே சிறுகதையாக சொன்னால் படிப்பவரை அந்த நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்று, கண்முன்னே நடப்பது போன்ற உணர்வினை உருவாக்கிட இயலும். சிறுகதை சிற்பிகளின் களம்.