தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த உலகத்தில் நிலை பெற்று வாழ்ந்து வரும் தமிழ் குடி. மேற்குலகம் காடுகளில் வேட்டையாடுவதற்கு கல் எடுத்து ஆயுதம் செய்வதற்கு முயன்று வந்த காலத்தில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனம் நம் தமிழினம். மொழியியல் ஆய்வு என்று துவங்கினால் அது உலகத்தின் எந்த மூலையில் பேசப்படும் மொழி என்றாலும் அதன் வேர் தமிழாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. "தமிழ் தென்னிந்திய மொழிகளுக்கு தாயாகவும், வட இந்திய மொழிகளுக்கு வேராகவும் திகழ்கிறது"- தேவநேயப் பாவாணர். "தமிழ் இந்திய மொழிகளுக்கு தாயாகவும், உலக மொழிகளுக்கு வேராகவும் திகழ்கிறது"- மா.சோ.விக்டர்.
மேலும் படிக்கபோட்டிகள்
அனைத்து மாதங்களிலும் “தமிழ்க்களம் ” சார்பில் நடத்தப்படும் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி,கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி பற்றிய தகவல் இங்கே அறிவிக்கப்படும். கடந்த மாதங்களில் நடந்த கவிதைப் போட்டிகள் பற்றியும் அதில் வெற்றி பெற்றோர் பற்றிய முழு தகவல் இங்கே அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சார்பில் கவிதை போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகம் பரிசாக வழங்கப்படுகிறது. அவர்களின் இல்ல முகவரிக்கு பரிசு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த மாதங்களில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கான பரிசுகள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
'தமிழின் சிறப்பு அதன் தொன்மத்தில் மட்டுமன்று, அதன் தொடர்ச்சியிலும் உண்டு என்பது அறிஞர் கருத்து. இந்தத் தொடர்ச்சி தமிழுக்கு உண்மையில் இருக்கின்றதா என்பதே சிலருக்குச் சந்தேகம். தமிழ் வரலாற்றில் பல உயர்வுகளும் தேக்கங்களும் இருப்பது உண்மை. தமிழ் தேய்ந்திருந்தபொழுது அதன் தொடர்ச்சி விட்டுப்போய், அதன் பின் தோன்றியவை தொடர்ச்சி இல்லை என்று சொல்பவரும் உண்டு. இந்தக் காலக்கோடு, தமிழின் தொன்மத்தையும் தொடர்ச்சியையும் உணர்த்த, தொடுக்க ஒரு சிறு முயற்சி ஆகும்