தமிழ்த்தேசிய செய்திகள் - செய்திகள் விரிவாக




சீமான் அறிக்கை


இராஜஸ்தான் மாநில முதல்வர் திரு அசோக் கேலாட் அவர்கள், ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளதையும், முறையான சான்றிதழ் இல்லாது இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதையும் முழுமையாக வரவேற்கிறேன்.

காற்று மாசுபாடு, கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைப் பெரிதும் பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளின் விகிதத்தையும் அதிகரிக்கச்செய்யும் என்பதை மனதிற்கொண்டு எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை பாராட்டுதற்குரியதாகும்.

இதேபோன்று, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த இழப்பீட்டை உறுதி செய்து, பட்டாசுத்தொழிலைச் சார்ந்து இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர மாற்று வாழ்வாதாரத்தை ஏற்பாடு செய்ய முன்வர வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை  கேட்டுக்கொள்கிறேன்.


முந்தைய பக்கம் செல்ல