தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.
உணர்வை இழந்து, உரிமையையும் இழந்து, அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக, மக்கள் படை கட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் தளபதி! மாவீரன்! நமது அண்ணன் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினுடைய நினைவு நாளில் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்!