
தெய்வத்தான் ஆகாது எனினும் ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் ; முயற்சிதன் மெய் வருத்தக் கூலிதரும் -அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற்போகாது. ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின் , அன்று அது தெய்வத்தானாக வில்லையென்று துணியப்படும்.ஆயினும் , அது வரை அவன்பட்ட பாட்டிற் கேற்ற பயனை அடைந்தே யிருப்பான் . முயற்சி வெற்றி பெற்றிருந்தால் ,அம்மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான் .ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை, ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக் கூடாது என்பது கருத்து.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பேச்சுகளை மட்டுமே கேட்பது; எழுத்துகளை மட்டுமே படிப்பது என்பது, உலக மாந்தர்களின் இயல்புகளில் ஒன்று. இத்தகையான இயல்புகளால் பேச்சு மற்றும் எழுத்து வடிவில் பகிரப்படும் பல கருத்துக்கள் அனைவரையும் சென்று சேருவதில்லை. ஆனால் ஓவியம் என்பது, பண்டைய காலம் தொட்டு மிக வலிமையான கருத்து பரிமாற்று கருவியாக இருந்து வருகிறது. பேச்சு, எழுத்து போல் அல்லாது அனைத்து மக்களையும் சென்று சேரக் கூடியது, ஓவியம் வாயிலான கருத்து பரப்புரை. தமிழ் இளம் தலைமுறையின் ஓவியத் திறனை வளர்க்கும் களம்.