>

பேச்சு போட்டி
post img


‘கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வர்'

தன் மக்களை உண்மையும்,நேர்மையுமாக பேரன்பு கொண்டு நேசிக்கும் ஒருவரால் தான், மக்களின் இன்னல்களுக்கு தீர்வு காணும் திட்டங்களை வகுக்க முடியும். அத்திட்டங்களை செல்படுத்துவதற்கு, அதிகார பலம் வேண்டும், அதிகார பலம் பெறுவதற்கு மக்களின் மனதை வெல்ல வேண்டும். உலக புரட்சியாளர்கள் அனைவரும் தங்கள் மண்ணின் மக்களோடு இரண்டுற கலந்திருந்தது தான், அப்புரட்சியாளர்களின் வெற்றிக்கு காரணம். மக்களின் மனதோடு கலந்துரையாட, அப்புரட்சியாளர்கள் பயன்படுத்திய பேராயுதம், பேச்சு. பேச்சாற்றல் மிக்க இளைய தலைமுறையை உருவாக்குவதற்கான களம்!